Get it on Google Play
Download on the App Store

உடற் குறைகள்

 

 

←முதுமை

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஉடற் குறைகள்

ஆரோக்கியம்→

 

 

 

 

 


439243குடும்பப் பழமொழிகள் — உடற் குறைகள்தியாகி ப. ராமசாமி

 

 


உடற்குறைகள்

 முடவன் ஒவ்வோர் அடியிலும் தடுக்கி விழுவான்.  - இந்தியா  
குருடனை விருந்துக்கு அழைத்தால், இரண்டு விருந்தினர்கள் வருவார்கள்.  -( , , )  ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக்கொள்.  -சீனா  
குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்.  -( , , )  
குருடன் பார்க்க முடியவில்லை என்பதால், வானத்தின் நீல நிறம் குறைந்து விடுவதில்லை.

 -டென்மார்க்  
குருடனும் சில சமயங்களில் தானியத்தைக் கண்டுபிடிக்கிறான்.  -ஃபிரான்ஸ்  
குருடன் கொடி பிடித்துச் சென்றால், அவன் பின்னால் செல்பவர்களுக்கு ஆபத்துத்தான்.  -( , , ) 
சூரியனையே பார்க்க முடியாதவன் குருடன்தான்.  - இதாலி  
மனம் வேறிடத்தில் இருந்தால், (எல்லோருக்குமே) கண்கள் குருடுதான்.  -லத்தீன்  குருடர்களின் நடுவில் நீங்களும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.  - துருக்கி  தீமையைப் பார்ப்பதைவிட, குருடாயிருப்பது மேல்.
 -இங்கிலாந்து  
கல்லும் வயிரமும் குருடனுக்கு ஒன்றுதான்.  -( , , )  
கூனனுக்குத் தன் கூனல் தெரியாது, பக்கத்திலிருப்பவன் கூனலையே பார்ப்பான்.

 - இங்கிலாந்து  
திகைத்து நிற்பவனை விட நொண்டி விரைவாக வந்து விடுவான்.  -( , , ) 
கூனன் தன் கூனலையும் சுமக்க வேண்டியிருக்கிறது.  -யூதர்  
நொண்டி வரும்வரை நாமும் காத்திருக்க வேண்டும்.

 - ஃபிரான்ஸ்