சகோதரர்
←குடும்பம்
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிசகோதரர்
மாமியார்→
439232குடும்பப் பழமொழிகள் — சகோதரர்தியாகி ப. ராமசாமி
சகோதரர்
சகோதரனைப் போன்ற நண்பனில்லை, சகோதரனைப் போன்ற பகைவனுமில்லை. - இந்தியா கைகளும் கால்களும் போன்றவர்கள் சகோதரர்கள். -சீனா
உடன் பிறந்தார்கள் ஒத்து வேலை செய்தால், மலைகளெல்லாம் பொன்னாகும். -( , , ) சகோதரர்களாயிருங்கள், ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். -அரேபியா
சொந்த சகோதரர்கள் கவனமாகக் கணக்கு வைத்திருப்பார்கள். சீனா
இளைய சகோதரனுக்குப் புத்தி அதிகம். -இங்கிலாந்து
சகோதரன் என்பவன் இயற்கையாக நமக்கு அளித்துள்ள நண்பன். -ஃபிரான்ஸ்
அவர்கள் சகோதரர்களானாலும், அவர்களுடைய பைகள் சகோதரிகளில்லை. - துருக்கி
தாயும் பிள்ளையும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறு. -தமிழ்நாடு
மூன்று சகோதரர்கள் மூன்று கோட்டைகள். - போர்ச்சுகல்