Get it on Google Play
Download on the App Store

இல்வாழ்க்கை

 

 

←அண்டை வீட்டுக்காரர்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஇல்வாழ்க்கை

குழந்தைகள்→

 

 

 

 

 


439226குடும்பப் பழமொழிகள் — இல்வாழ்க்கைதியாகி ப. ராமசாமி

 

 


இல்வாழ்க்கை

 
பழைய வீட்டைச் சீர்ப்படுத்து, பழைய மனைவியைப் போற்று.  -இந்தியா  
வீட்டுக் குப்பையை வீட்டிலேயே அள.  -( ,, ) 
ஏழு திரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டு விடுவாய்; யசமானி அம்மாளின் குறை ஒரே திரையில் மறைந்து விடும்.  -( ,, ) 
கட்டிலிலே கணவனும் மனைவியும், வெளியிலே அவர்கள் விருந்தினர்கள்.  -சீனா  
கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி.  -( ,, )  
இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது; வெளியே யிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர், உள்ளே யிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர்.  -அரேபியா  
ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதைவிட

இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம்.  -பாரசீகம்  
கணவன் கரண்டியால் சேகரித்து வருவதை, நீ மண்
வெட்டியால் வெளியே வாரி வாரி இறைக்க வேண்டாம்.

 - இங்கிலாந்து  
பெண் இல்லை யென்றால், வீடில்லை.  - பல்கேரியா  
நீ வெளியில் எங்கே சுற்றினாலும், இன்பமயமான உன் வீட்டுக்கு வந்துவிடு.  -( ,, ) 
உன் வீடு-உனது ராஜ்யம்.  -( ,, )  அழகான மனைவியும் அருமையான பழைய மதுவும் இருந்தால், நண்பர்கள் பலர் வருவார்கள்.  -பல்கேரியா  
பெண் இல்லாத வீடு வாளியில்லாத கிணறு.  -( ,, )  
திருமணப் பெண்ணுக்கு இசையும் அழகும்; விவாகமான பின் பசியும் தாகமும்.  - எஸ்டோனியா  தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒண்டியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை.  -( ,, ) 
வீட்டுக்குத் தேவையானவை நான்கு: தானியம், சேவல், பூனை, மனைவி.  - இதாலி  
கணவன் குடித்தால் பாதி வீடு எரியும், மனைவியும் குடித்தால் முழு வீடும் எரியும்.  -ரஷ்யா  
தன் வீட்டுக்கு வெளியிலே இன்பத்தை நாடுவோன் தனது நிழலையே துரத்திக் கொண்டு திரிகிறான்.  -( ,, )  
உன் சொந்த வீட்டில் சுவர்கள் கூட உனக்கு உதவியாயிருக்கும்.  -( ,, ) 
என்னை என் குடும்பத்திலிருந்து காப்பாற்றுங்கள்; என்

எதிரிகளை நானே பார்த்துக் கொள்கிறேன்.  - செர்பியா  
தரையை வைத்து வீடு கட்டப் பெறுவதில்லை, ஒரு

பெண்ணை வைத்தே கட்டப் பெறுகின்றது.  -( ,, )  
வீட்டில் கடிகாரமே யசமானரா யிருக்கவேண்டும்.

 -சுவீடன்  
வீட்டுத் தலைவன்மீது தான் வீட்டிலுள்ள எல்லோருடைய குப்பைகளும் கொட்டப்படும்.  - ஆப்பிரிகா  பெண்தான் இல்லம்.  -( ,, ) 
பெண் பிள்ளை இரண்டு வார்த்தைகள் சொன்னால், ஒன்றை எடுத்துக் கொண்டு, மற்றதை விட்டுவிடு.  -( ,, )  சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக
இருக்கின்றன; துக்ககரமான குடும்பம் ஒவ்வொன்றும்

வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றது.  -டால்ஸ்டாய்  
கடவுள் நமக்கு உறவினரைக் கொடுத்திருக்கிறார்; ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.  -இங்கிலாந்து  அவசியமான பொருள்கள் நிறைந்த ஒரு வீடு, நன்றாக
உழுத ஒரு சிறு நிலம், நல்ல சிந்தனையுள்ள சிறு - மனைவி மூன்றுமே இன்ப வாழ்வளிக்கும்.  -( ,, )  
வெளியே கிடைக்கும் வெந்த இறைச்சியைக் காட்டினும்,

வீட்டிலே யிருக்கும் உலர்ந்த ரொட்டி மேல்.  -( ,, )  
வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லா ஆசைகளின் முடிவான நோக்கம்.  -( ,, )  
நான் என் தொப்பியை மாட்டும் இடமே என் வீடு.  -( ,, )  
இதயம் எங்கு தங்கியுளதோ அதுவே வீடு.  -( ,, )  
தன் குடும்பத்தை விட்டு ஓடுபவனுக்கு முடிவான இடம் இல்லை   -லத்தீன்  
நம் சொந்த வீடே மற்ற வீடுகளைவிட மேலானது.  -( ,, )  
என் வீட்டுக்கு நானே ராஜா.  -ஸ்பெயின்  
தன் வீட்டில் அமைதி யில்லாதவன் பூலோக நரகில் இருக்கிறான்.  - துருக்கி  
வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை.  -ஃபிரான்ஸ்  
சேவல் தன் குப்பை மேட்டிலிருந்தே கூவும்.  -( ,, )  
வீட்டை விட்டு வெகு தூரத்திலிருப்பவன் அபாயத்திற்கு அருகிலிருக்கிறான்.  -ஹாலந்து