ஒற்றுமை
←பழமை
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஒற்றுமை
விருந்து→
439239குடும்பப் பழமொழிகள் — ஒற்றுமைதியாகி ப. ராமசாமி
ஒற்றுமை
ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம். - இந்தியா
நானும் என் சகோதரனும் எங்கள் அத்தானுக்குப் பகையானாலும், அந்நியன் வந்தால், நானும் அத்தானும் அவனுக்குப் பகையா யிருப்போம். - அரேபியா
வாதியும் எதிரியும் ஒரு படகிலே சென்றால், சாட்சிகள் நீந்தித்தான் செல்ல வேண்டும். -கீ. நா. அறுந்த கயிற்றை முடிக்கலாம், ஆனால் முடிச்சு இருக்கும். -பாரசீகம்
ஒரு நகரத்திற்கு எதிராக மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்தால், அதை அழித்து விடுவார்கள். -அரேபியா
மூன்று பிரிகளைக் கொண்ட சரட்டை விரைவில் அறுக்க முடியாது. -ப. ஏற்பாடு
தனியே நிற்கும் ஆடு ஓநாயிடம் சிக்கக்கூடும்.
- இங்கிலாந்து
ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம். -( , , )
பலமில்லாதவையும் ஒன்று சேர்ந்தால், பலமுண்டாகிவிடும். -( , , )
ஒருவருக்காக எல்லோரும், எல்லோருக்குமாக ஒவ்வொருவரும். -டூமாஸ்
ஒற்றுமைப்பட்டால் வலிமை அதிகம். - லத்தீன்
அடக்கமாக அடங்கிக் கிடப்பவர்களுக்கு ஒற்றுமையே சிறந்த வலிமை. -( , , )
கயிறு கட்டாத கதிர்க்கட்டு வெறும் வைக்கோல்தான்.
-ரஷ்யா
எவன் என்னோடு இருக்கவில்லையோ அவன் எனக்கு எதிரானவன். -பு. ஏற்பாடு
கட்டாகவுள்ள கழிகளை ஒடிக்க முடியாது. -ஆப்பிரிகா