Get it on Google Play
Download on the App Store

கைம்பெண்

 

 

←சுற்றம்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகைம்பெண்

அநாதைகள்→

 

 

 

 

 


439236குடும்பப் பழமொழிகள் — கைம்பெண்தியாகி ப. ராமசாமி

 

 


கைம்பெண்

 
விதவை துடுப்பில்லாத மரக்கலம்.  சீனா  நிலம் மழையில்லாமல் அழும், விதவை கணவனில்லாமல் அழுவாள்  -இந்தியா  கைம்பெண் வளர்த்த பிள்ளை மூக்குச் சரடு இல்லாத காளை.  -( , , ) 
பணக்காரியான  விதவையின் கண்ணீர் விரைவில் உலர்ந்து விடும்.  -டென்மார்க்  
விதவையை மணப்பவன் விரைவிலே முடிக்க வேண்டும்.  - இங்கிலாந்து  
விதவை துக்கம் காக்கும் பொழுதே, விவாகம் செய்து கொள்.  -( , , ) 
விதவைகள் எப்போதும் பணக்காரிகள்.  -( , , ) 
பெருமையோடு ஒருத்தி ஒரு முறைதான் மனைவியா யிருக்க முடியும், ஒரு முறை தான் கைம்பெண்ணா யிருக்க முடியும்.  - ஃபிரான்ஸ்  
செல்வமுள்ள கைம்பெண் ஒரு கண்ணால் அழுவாள், ஒரு கண்ணால் சிரிப்பாள்.  - போர்ச்சுகல்  அழகுள்ள விதவையை (விரைவில்) விவாகம் செய்து
வைக்க வேண்டும், அல்லது புதைக்க வேண்டும், அல்லது கன்னிகா மடத்தில் அடைத்து வைக்க வேண்டும்.  -ஸ்பெயின்  
விதவையின் வீட்டில் கொழுத்த சுண்டெலி இராது.

 - துருக்கி  வயதான கன்னியைவிட இளமையான விதவை மேல்.
 -யூதர்  
கைம்பெண் கூரையில்லாத கட்டடம்.  -எஸ்டோனியா  [மனைவியில்லாதவனுக்கும் இது பொருந்தும்.)