Get it on Google Play
Download on the App Store

சுற்றம்

 

 

←மருமகன்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிசுற்றம்

கைம்பெண்→

 

 

 

 

 


439235குடும்பப் பழமொழிகள் — சுற்றம்தியாகி ப. ராமசாமி

 

 


சுற்றம்

 
அன்புள்ள அந்நியனும் நமக்கு உறவு தான்.  - இந்தியா  
உறவுள்ள இடத்தில் பகையும் இருக்கும்.  -( , , )  
உதிர்ந்த இறகைப் பசை வைத்துத்தான் ஒட்டவேண்டும்!

 -ஆப்பிரிகா  
நம் உறவினர்கள் செழிப்பாயிருப்பார்களாக, நாம் அவர்களிடம் செல்லாமல் இருப்போமாக!  -போலந்து  
அத்தையோடு நீ உண்ணலாம், ஆனால் தினமும் போய் உட்காரக் கூடாது.  - இங்கிலாந்து  
அதிக உறவினர், அதிகத் துன்பம்.  - பிரான்ஸ்  
நமக்குக் காசு நிறைய இருந்தால், அத்தை பிள்ளைகளும், அம்மான் பிள்ளைகளும் கிடைப்பார்கள்.  - இதாலி  
நீ உன் மனைவியை நேசித்தால், அவளுடைய உறவினரையும் நேசிக்க வேண்டும்.  -யூதர்  உறவினர் செல்வமடையும் பொழுதுதான் நாம் அவர்களை மதிக்கிறோம்.  -( , , )  
உதிரம் நீரைவிடச் சூடுள்ளது.  -எஸ்டோனியா  மிக நெருங்கிய பந்துக்களின் துவேஷமே அதிகமா யிருக்கும்.  - லத்தீன்  உறவினரைப் போய்ப் பார்த்து வரலாம், அவர்களுடனே வசித்திருக்க முடியாது.  - அமெரிக்கா  
சிறு புண்களையும் ஏழை உறவினரையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக் கூடாது.  -சுவீடன்  
உன் உறவினரே உன்னைக் கொட்டும் தேள்கள்.  -எகிப்து