60. குமரகுருபரர் பிரபந்தங்கள்
←← 59. குறுந்தொகைப் பதிப்பு
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்60. குமரகுருபரர் பிரபந்தங்கள்
61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு →→
440047தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 60. குமரகுருபரர் பிரபந்தங்கள்கி. வா. ஜகந்நாதன்
குமரகுருபரர் பிரபந்தங்கள்
திருப்பனந்தாளில் காசிமடத்தின் தலைவராக இருந்த சாமிநாதத் தம்பிரான் ஆசிரியரிடம் பெரும் மதிப்பு உடையவர். காசிமடத்தின் முதல்வராகிய குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்களை ஆசிரியர் பதிப்பித்து வெளியிடவேண்டும் என்ற அவா அவருக்கு இருந்தது. தம் விருப்பத்தை ஒரு முறை ஆசிரியரிடம் தெரிவித்தார். -
அதுமுதல் ஆசிரியர் அப்பிரபந்தத்திற்குரிய குறிப்புகளை எழுதலானார். விரிவான முறையில் முகவுரை, அடிக் குறிப்போடு அதனை அச்சிடத் தொடங்கினார். 1939-ஆம் ஆண்டு குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்கள் வெளிவந்தன.
அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு ஆசிரியர் ஒருமுறை திருப்பனந்தாள் சென்றிருந்தார். சாமிநாதத் தம்பிரான் ஆசிரியருக்காகத் தனி இருக்கை ஏற்பாடு செய்திருந்தார். ஆசிரியர் வந்திருப்பது தெரிந்து பல புலவர்கள் வந்து இவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி நாள் போவதே தெரியாமல் பொழுது போய்க்கொண்டிருந்தது.