48. பல்கலைக் கழகத்தில் பேச்சு
←← 47. நான் ஆசிரியரை அடைந்தது
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்48. பல்கலைக் கழகத்தில் பேச்சு
49. நான் மாணவனாகச் சேர்ந்தது →→
440035தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 48. பல்கலைக் கழகத்தில் பேச்சுகி. வா. ஜகந்நாதன்
பல்கலைக் கழகத்தில் பேச்சு
சென்னைக்கு வந்தவுடன் பல்கலைக் கழகத்திலிருந்து பத்துநாட்கள் பழைய நூல்களைப் பற்றிப் பேசவேண்டுமென்று ஆசிரியருக்கு அழைப்பு வந்தது. 1827-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் ஐந்து நாட்களும், டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களும் அந்தச் சொற்பொழிவுகள் பல்கலைக் கழகச் செனட் மண்டபத்தில் நடைபெற்றன. அந்தச் சொற்பொழிவுக்காகப் பல்கலைக் கழகத்தார் 500 ரூபாய் வழங்கினர். அதுவரைக்கும் மண்ணெண்ணெய் விளக்கில் பணி செய்து கொண்டிருந்த ஆசிரியர் அந்தப் பணத்தைக் கொண்டு தியாகராச விலாசத்திற்கு மின்சார விளக்குப் போடச் செய்தார். கார்த்திகைத் தினத்தன்று மின்சாரத் தொடர்பு கிடைத்தது நல்ல சகுனமாக ஆசிரியப் பெருமானுக்குத் தோன்றியது.