iii. அன்ன சத்திரங்கள்
←ii. திருமடங்கள்
சேதுபதி மன்னர் வரலாறு ஆசிரியர் எஸ். எம். கமால்iii. அன்ன சத்திரங்கள்
iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள்→
418976சேதுபதி மன்னர் வரலாறு — iii. அன்ன சத்திரங்கள்எஸ். எம். கமால்
III அன்னசத்திரங்கள்
பாரக மடங்கலும் பசிப்பிணி அறுக எனத் தமது அமுத சுரபியைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு மணிமேகலை அமுது படைத்ததாகத் தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. சேது மன்னர்களது ஆட்சியில் பசிப்பிணி நீங்கி மக்கள் அனைவரும் நிறைவுடன் வாழ்ந்ததாகத் தெரிய வருகின்றது. மேலும் சேது யாத்திரையாக இராமேஸ்வரம் வருகின்ற பயணிகளுக்குச் சேதுபதி மன்னர்கள் நாள் தோறும் அன்னம் படைத்ததைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இராமேஸ்வரம் திருக்கோயில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பதிகங்கள் பாடப்பெற்றுப் போற்றப்பட்டு வந்ததை இலக்கிய வரலாறு தெரிவிக்கின்றது. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின் படி விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள மாநிலங்களில் இருந்து பயணிகள் சேதுயாத்திரையை மேற்கொண்டு வந்து சென்றனர் என்பது தெரிய வருகின்றது. அப்பொழுது வடக்கே இருந்து தெற்கேயும் மேற்கே இருந்து கிழக்கேயும், தெற்கே இருந்து வடகிழக்கேயுமாக மூன்று பாதைகள் இராமேஸ்வரத்திற்கு இருந்தன. போக்குவரத்து வசதியும் மக்கள் நடமாட்டமும் இல்லாத இந்தப் பாதைகளின் வழியே தலையில் ஒரு சிறிய துணி முடிச்சைச் சுமந்தவாறு கால் நடையாகவே வருகின்ற நூற்றுக் கணக்கான பயணிகளுக்குச் சேதுபதி மன்னர்கள் அந்த வழித்தடங்களில் அன்ன சத்திரங்கள் அமைத்துப் பயணிகளது களைப்பையும் பசிப் பிணியையும் நீக்கி உதவி வந்தனர். வடக்கே சோழ மண்டலத்தில் இருந்து கிழக்குக் கடற்கரையோரமாக இராமேஸ்வரம் வழித் தடத்திலும் நெல்லைச் சீமையின் வட பகுதியான வேம்பாறிலிருந்து சாயல் குடி, உத்திர கோசமங்கை. திருப்புல்லாணி வழியாகக் கிழக்கே செல்லுகின்ற வழித் தடத்திலும் அன்ன சத்திரங்கள் அமைத்து உதவிய பல மண்டபங்கள் இடிபாடுகளுடன் பரிதாபமாக இன்றும் காட்சியளிப்பவனாக இருக்கின்றன.
கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை இந்த வழித் தடங்களில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு பயணிக்கும் அன்ன சத்திரங்கள் நாள் தோறும் இருவேளை சோறு வழங்குவதற்காகச் சேதுபதி மன்னர்கள் பல ஊர்களை இறையிலியாக வழங்கியிருந்தனர். இவைகளைக் குறிக்கும் செப்பேடுகளிலிருந்து திரட்டப் பெற்ற செய்திகளின் படி 39 சத்திரங்களுக்கு எழுபத்தி ஏழு (77) ஊர்களைச் சேதுபதி மன்னர்கள் சர்வமானியமாக வழங்கியிருந்தது இப்பொழுது தெரிய வருகிறது. அவைகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆவணப் பதிவேடுகளின்படி
III சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய நிலக் கொடைகளின் விவரம் அன்ன சத்திரங்களுக்கு
தானம் பெற்ற அமைப்பு
தானம் வழங்கப்பட்ட ஊர்
தானம் வழங்கப்பட்ட நாள்
I குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. செல்ல பூபால சத்திரம், இராமநாதபுரம்
வெள்ள மரிச்சுக்கட்டி
கொடிக்குளம்
II செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. திருப்புல்லாணி - வெள்ளையன் சேர்வை சத்திரம்
காஞ்சிரங்குடி சகம் 1678 (கி.பி.1756) தாது ஐப்பசி 17
III முத்து ராமலிங்க சேதுபதி
1. ஆத்தங்கரை சத்திரம்
நகரிகாத்தான்
2. பிள்ளை மடம் சத்திரம்
சாத்தக்கோன் வலசை
3. தோணித்துறை சத்திரம், மண்டபம்
அத்தியூத்து
4. கஜானா வெங்கட் ராவ் சத்திரம், திருப்புல்லாணி
5. கோதண்ட ராம சத்திரம்
பந்தப்பனேந்தல்
கடுக்காய் வலசை சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு பங்குனி 28, 6. புருசோத்தம் பண்டித சத்திரம் - திருப்புல்லாணி
கழுநீர்மங்கலம் சகம் 1703 (கி.பி.1783) பிலவதை
7. தனுஷ்கோடி சத்திரம்
ஆலங்குளம் -
போத்த நதி -
8. அலங்கானுார் சத்திரம்
கிழத்தி சேரி சகம் 1692 (கி.பி.1740) விரோதி ஆவணி 25,
9. தேவிப்பட்டினம் சத்திரம்
தென் பொதுவக்குடி
அடந்தனக் கோட்டை - சகம் 1685 (கி.பி.1763) சுபானு
வைகாசி 10.
சிலுக்குவார்பட்டி
10. உப்பூர் சத்திரம்
சித்துர்வாடி
11. முத்துராமலிங்க பட்டினச் சத்திரம்
முத்துராமலிங்க பட்டினம்
இளையாதான் வயல்
காடன்குடி
12. முடுக்கன்குளம் சத்திரம், தோப்பூர்
தோப்பூர், களுவான்சேரி, மறக்குளம், ஆலங்குளம்,
சொக்கம்பட்டி, இலுப்பைக்குளம், பனைக்குளம், குறிஞ்சிக்குளம்.
13. வேலாயுத சத்திரம், பரமக்குடி
வேலாயுதபுரம்
மிதிலைக்குளம்
இலுப்பக்குளம்
கிளியனேந்தல்
சிறுமிதிலைக்குளம்
வலையனேந்தல்
செப்பேடுகளின்படி அன்ன சத்திரங்களுக்கு
தானம் பெற்ற அமைப்பு
தானம் வழங்கப்பட்ட ஊர்
தானம் வழங்கப்பட்ட நாள்
I திருமலை சேதுபதி
1. பிடாரி சேரி சத்திரம், திருச்சுழி
II ராணி காதலி நாச்சியார்
1. தனுஷ்கோடி சத்திரம்
களத்துர் சகம் 1631 (கி.பி.1709) விரோதி கார்த்திகை
2. என் மணம் கொண்டான் சத்திரம்
III ரகுநாத கிழவன் சேதுபதி
1. புதுமடம் சத்திரம்
புதுமடம் கி.பி.(1710) வெகுதான்ய ஆனி 6
2. சூடியூர் சத்திரம்
கணபதி ஏந்தல்
IV முத்துராமலிங்க சேதுபதி
1. சாமிநாத மணியக்காரன் சத்திரம், மண்டபம்
துரத்தியேந்தல்
2. நாகநாத சமுத்திரச் சத்திரம்
இராமநாத ஓடை -
3. கடுகுச் சந்தை சத்திரம்
கடுகுச் சந்தை 4. அலங்கானுர் சத்திரம்
கழுவன் சேரி - சகம் 1692 (கி.பி.1770)
அலங்கானுர் - சகம் 1692 (கி.பி.1770)
5. சாமிநாத மணியக்காரன் சத்திரம்
தெளிச்சாத்த நல்லூர்
6. முத்துராமலிங்க பட்டின சத்திரம்
வெட்டுக்குளம்
முத்துராமலிங்க பட்டினம்
பிரம்பு வயல்
மருத வயல்
7. கோட்டைப்பட்டின சத்திரம்
கொடிக்குளம்
8. மல்லான் கிணறு சத்திரம், திருச்சுழி
அத்திக்குளம், வலயபட்டி
9. ராஜ கோபாலன் சத்திரம், இராமேசுவரம்
வயலூர்
10. முகுந்தரால் சத்திரம், தேவிப்பட்டினம்
தேவிபட்டினம், காரேந்தல், வென்குளம்
தனுஷ்கோடி சத்திரம், போத்தநதி
12. மலையாளம் சத்திரம், திருப்புல்லாணி
13. வேதாளை சத்திரம்
அனிச்சகுடி சகம் 1690 (கி.பி.1768) விரோதி ஆவணி 21.
Ꮩ சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. பாம்பன் சத்திரம்
மானகுடி
காரானி
வெள்ளரி ஓடை
ஒரு திராநாடு
தரவை சாம்பல் ஊரணி
மாளன்குடி
VI முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. அக்காள் மடம் சத்திரம்
தேவூர்
2. மேலக் கோபுர வாசல் சத்திரம், இராமேஸ்வரம்
சித்தார்கோட்டை
3. நந்த கோபாலன் சத்திரம், இராமேஸ்வரம்.
குமரியேந்தல் சகம் 1670 (கி.பி.1748)
4. நாகப்பன் செட்டி சத்திரம்
பெத்தனேந்தல் (கி.பி.1742)
5. சுந்தர தாஸ் சத்திரம், திருப்பாலைக்குடி
கோட்டையூர் கோட்டை
திருப்பாலைக்குடி
6. தோணித்துறை சத்திரம், மண்டபம்.
அத்தியூத்து சகம் 1635 (கி.பி.1713)
VII திருமலை சேதுபதி
1. அம்பட்ட மடம் சத்திரம், இராமேஸ்வரம்.
அரிகுடி, கி.பி.1665.
VII மங்களேஸ்வரி நாச்சியார்
1. போகலூர் சத்திரம், சத்திரக்குடி
நீலக்கண்டி சந்திரம்
அருவருடி
IX முத்து வீராயி நாச்சியார்
1. முத்து வீராயி சத்திரம், இராமநாதபுரம்.
மஞ்ச்சுக்குளம்
கடம்பூர்
சிவாவயல்
கீழப்பனையூர்
2. இதம்பாடல் சத்திரம்
X முதது வயிரவநாத சேதுபதி
1. அழகப் பாலச் சத்திரம்
ஆயக்குடி சகம் 1634 (கி.பி.1712) நந்தன. ஆஷாட
கந்தனாவூர்
X குமாரமுத்து விஜய ரகுநாதசேதுபதி
இராமேஸ்வர சத்திரம் குளுவன்குடி சகம் 1659, கி.பி.1737