Get it on Google Play
Download on the App Store

ii. திருமடங்கள்

 

 

←i. திருக்கோயில்கள்

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்ii. திருமடங்கள்

iii. அன்ன சத்திரங்கள்→

 

 

 

 

 


418975சேதுபதி மன்னர் வரலாறு — ii. திருமடங்கள்எஸ். எம். கமால்

 

II திருமடங்கள்:
காலங்கள் தோறும் மக்களின் உள்ளங்களில் சமயப் பற்றை வளர்ப்பதற்காகச் சேதுநாட்டின் பல திருமடங்கள் இயங்கி வந்ததை வரலாற்றில் காணுகின்றோம். அவைகளில் குறிப்பாகச் சைவ சமய பிரச்சாரத்திற்காகத் திருவாவடுதுறை ஆதினமும் வைணவக் கொள்கைகளை விளக்குவதற்காக நாங்குநேரி ஜீயர் சுவாமிகள் மடமும் இயங்கி வந்ததை, இன்றும் இயங்கி வருவதைக் காண்கின்றோம்.
மேலும் பல சிறிய மடங்கள் சேதுநாட்டில் இயங்கி வந்ததை ஆவணப் பதிவுகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இந்தப் பதிவுகளின்படி அப்பொழுது 22 திருமடங்கள் இயங்கி வந்தன என்பது தெரிய வருகின்றது. இவைகளில் ஒரே ஒரு மடம் நீங்கலாக 20 திருமடங்கள் சைவ சமயத்தைச் சார்ந்தனவாக இருந்தன. பரமக்குடி வட்டத்திலுள்ள பண்டரி நாதர் மடம் என்ற அமைப்பு மட்டும் வைணவர்களால் நடத்தப்பட்டு வந்தது.
இந்தத் திருமடங்களில் பெரும்பாலும் வழிப் போக்கர்களுக்கும் பயணிகளுக்கும் நீரும் மோரும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. திருப்பெருந்துறையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் நாள்தோறும் மகேசுவர பூஜை நடத்தப்பட்டுப் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த அறச்செயல்கள் என்றும் நிலைத்து நடைபெற வேண்டும் என்பதற்காகச் சேதுமன்னர்கள் இந்த 22 மடங்களுக்கு 41 ஊர்களை சர்வ மானியமாக தானம் வழங்கி இருந்தனர். அந்த மடங்களின் பெயர்களும் அவைகளுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்களின் பெயர்களும் பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆவணப் பதிவேடுகளின்படி


சேதுபதி மன்னர்கள் கொடைகளின் விவரம் வழங்கிய நிலக் கொடைகளின் விவரம் திருமடங்களுக்கு

 

 

 

 


தானம் பெற்ற அமைப்பு

தானம் வழங்கப்பட்ட ஊர்

தானம் வழங்கப்பட்ட நாள்

 


I. தளவாய் சேதுபதி
1. மாசிலாமணி பண்டார மடம், இராமேஸ்வரம்

புளியங்குடி சகம் 1553 (கி.பி.1631) பிரஜோர்பதி தை 15 II திருமலை சேதுபதி
1. ஆனைகுடி சகம் 1588 (கி.பி.1666) பிரபவ வையாசி 5
2. பண்டரிநாத மடம், சித்தனேந்தல்
3. திருவாவடுதுறை மடம், திருவாவடுதுறை

கங்கணிகட்டி சேரி சகம் 1582 (கி.பி.1660) சார்வரி மாசி 5
4. அன்னதான மடம், கமுதை

கமுதை சகம் (1592) கி.பி.1670 சாதாரண தை.
III கிழவன் சேதுபதி
1. திருவாவடுதுறை மடம்

திருப்பாலைக் கோட்டை சகம் 1611 (கி.பி.1689) பிரமோதுத கார்த்திகை
நாட்டு சேரி சகம் 1611 (கி.பி.1689) பிரமோதுத கார்த்திகை
2. பெருமாள் ஞானிகள் மடம் (தண்ணீர் பந்தல்)

பறையன்குளம் சகம் 1627 (கி.பி.1705) பார்த்திப ஆனி 1.
IV முத்து வயிரவநாத சேதுபதி
1. மூர்த்தி மடம் - அழகன்குளம்

பின்னாணியாரேந்தல் சகம் 1631 (கி.பி.1713) விகாரி வைகாசி
V முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. பண்டார மடம், உத்தரவை

பூவாணி சகம் 1639 (கி.பி.1718) வில9உ மாசி 25
VI சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. காசி மடம் - தளிர் மருங்கூர் சகம் 1657 (கி.பி.1755) சித்தாட்டி
2. நமசிவாய ஐயர் மடம் - சூரங்கோட்டை சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி ஆவணி 3. VII செல்லமுத்து ரகுநாத சேதுபதி
1. சொக்கநாத மடம், செட்டியேந்தல்

கீழக்கோட்டை சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக ஆவணி 3
செட்டியேந்தல் சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக ஆவணி 3.
2. பாப்பாகுடி மடம் - தொருவளுர் சகம் 1681 (கி.பி.1759) வெகுதான்ய ஆவணி.
3. வாகைக்குளம் மடம்

வாகைக்குளம் சகம் 1673 (கி.பி.1751) பிரமானந்த சித்திரை 18.
VII முத்துராமலிங்க சேதுபதி
1. நாகாச்சி மடம், நாகாச்சி.

பரமனேந்தல் சகம் 1703 (கி.பி.1771) பிலவ தை 15.
2. முத்துராமலிங்கபுர மடம்

கழனிக்குடி சகம் 1685 (கி.பி.1763) கோபணு சித்திரை 10
பிரம்பு வயல்
கரந்த வயல்
பெரிய கரையான்
சின்னக்கரையான்
3. திருவாவடுதுறை மடம், திருவாவடுதுறை

வல்லக்குளம் சகம் 1703 (கி.பி.1783) பிலவ மார்கழி 16.
4. திருவாரூர் மடம்

சூரியன் கோட்டை சகம் 1688 (கி.பி.1766) விய வைகாசி 1
5. தாமோதர பட்டின மடம்

மாடக்கோட்டை சகம் 1684 (கி.பி.1762) பரிதாகி வைகாசி 14 செப்பேடுகளின்படி திருமடங்களுக்கு

 

 

 

 


தானம் பெற்ற அமைப்பு

தானம் வழங்கப்பட்ட ஊர்

தானம் வழங்கப்பட்ட நாள்

 


I திருமலை சேதுபதி
1. அக்காள் மடம், இராமேஸ்வரம்.

மச்சூர் கி.பி.1645 சாதாரண
2. மாவூர் மடம்

மாவூர் கி.பி.1645 சாதாரண
1 கிழவன் சேதுபதி
1. முருகப்பன் மட தர்மம்

திருப்பொற் கோட்டை
பகையணி - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்ப தை 15.
பிராந்தனி
11 செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி
1. திருவாவடுதுறை ஆதீனம்

நாட்டுச்சேரி சகம் 1674 (கி.பி.1752) ஆங்கீரச மார்கழி 20,
IV முத்துராமலிங்க சேதுபதி
1. இராமசாமி மடம்

பால்க்கரை கி.பி.1794 ஆங்கீரச மார்கழி20.
V முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர்கள்
தனுக்கோடி இராமுத் தேவர்
1. சித்து ரெட்டியார் மடம், நத்தக் காடு.

வேப்பங்குளம் - சகம் 1678 (கி.பி.1756) ஆடி 8. I திருமலை ரெகுநாத சேதுபதி
1. திருவாவடுதுறை மடம்

நாஞ்சி வயல்
நாணாக்குடி - சகம் 1582 (கி.பி.1670) சார்வாரி மாசி
2. பெருங்கரை தெய்வராயன் மடம்

கொத்தன்குளம் - சகம் 1592 (கி.பி.1671) சாதாரணராசி
II குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. திருவாவடுதுறை மடம்

பிசிர்க்குடி - சகம் 1654 (கி.பி.1731) விரோதி கிருது ஆவணி 31
திருப்பக்கோட்டை - சகம் 1656 (கி.பி.1733) பிரமாதீச
கார்த்திகை 10
III செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. சாருவனேந்தல் பள்ள மடம்

சாருவனேந்தல் - சகம் 1677 (கி.பி.1755) யுவ ஆடி 20
IV முத்துராமலிங்க சேதுபதி
1. திருவாவடுதுறை மடம்

வல்லைக்குளம் - சகம் 1703 (கி.பி.1782) பிலவதனுர்
2. மாசிலாமணி பண்டாரம்

கள்ளக்குடி
மடப்புரம் - சகம் 1685 (கி.பி.1763) சுபானு சித்திரை 10
 

 

 


 

சேதுபதி மன்னர் வரலாறு

Anahita
Chapters
இயல் I தொன்மையும், தோற்றமும். i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் ii. கூத்தன் சேதுபதி iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி i. முத்து வயிரவநாத சேதுபதி ii. முத்து விஜயரகுநாத சேதுபதி iii. பவானி சங்கர சேதுபதி iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ii. இராமன் இல்லாத அயோத்தி iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு iv. சேது மன்னர்களது நிர்வாகம் i. சேதுபதி மன்னரது நடைமுறைகள் ii. அரண்மனையும் ஆவணங்களும் iii. அரண்மனை நடைமுறைகள் iv. இராமலிங்க விலாசம் அரண்மனை v. மூலக் கொத்தளம் இயல் IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் ii. அண்ணாசாமி சேதுபதி iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி iv. ராணி முத்து வீராயி நாச்சியார் vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி vii. பாஸ்கர சேதுபதி viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள் ii. சில முக்கிய நிகழ்வுகள் இயல் XI என்றும் நிலைத்து நிற்க... i. திருக்கோயில்கள் ii. திருமடங்கள் iii. அன்ன சத்திரங்கள் iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் v. தமிழ்ப் புலவர்கள் vi. தனியார்கள் இணைப்பு - அ இணைப்பு - ஆ இணைப்பு - இ i. போகலூர் சேதுபதிகள் ii. இராமநாதபுரம் சேதுபதிகள் iii. ஜமீன்தார் கொடி வழி i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு