Get it on Google Play
Download on the App Store

i. முத்து வயிரவநாத சேதுபதி

 

 

←இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்i. முத்து வயிரவநாத சேதுபதி

ii. முத்து விஜயரகுநாத சேதுபதி→

 

 

 

 

 


418947சேதுபதி மன்னர் வரலாறு — i. முத்து வயிரவநாத சேதுபதிஎஸ். எம். கமால்

 

இயல் - VII முத்து வயிரவநாத சேதுபதி
மறைந்த கிழவன் சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லை என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி ரெகுநாத கிழவன் சேதுபதிக்கு 1) ரணசிங்கத் தேவர். 2) பவானிசங்கரத் தேவர் என்ற இரு ஆண் மக்கள் இருந்து வந்தனர் என்பதை அறிகிறோம். ரணசிங்கத் தேவர் சேதுநாட்டின் வடபகுதியான திருப்பத்தூர் பகுயில் ஆளுநராக இருந்தார் என்றும் கி.பி. 1702ல் சேதுபதி மன்னருக்கும் மதுரை அரசி இராணிமங்கம்மாவிற்கும் ஏற்பட்டப் போரில் வீரமரணம் அடைந்தார் என்றும் தெரியவருகிறது. அடுத்த மகனான பவானிசங்கரத்தேவர் இராமநாதபுரம் அரண்மனை சம்பிரதாயப்படி சேதுபதி மன்னருக்கும் செம்பிநாட்டு மறக்குல பெண்மணிக்கும் பிறக்காதவர் ஆதலால் அவரது அரசு உரிமை மறுக்கப்பட்டது. ரெகுநாத கிழவன் சேதுபதியின் தங்கை மகனான திருஉத்திரகோச மங்கை கடம்பத்தேவர் மகன் முத்துவயிரவநாத சேதுபதி இராமநாதபுரம் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டார். கி.பி. 1713 வரை ஆட்சி செய்த இவரது ஆட்சிக் காலத்தை குறிக்கும் இரண்டு செப்பேடுகள் கிடைத்துள்ளன. முதலாவதாக கி.பி. 1710ல் செவ்விருக்கை நாட்டு அழகன் குளத்தை அடுத்து பின்னாணியாரேந்தல் ஊரினை அழகன்குளம் மூர்த்தி மடம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. இரண்டாவதாக கி.பி. 1711ல் இராமாயண பிரசங்க சேவையினைப் பாராட்டி மேலச்செல்வனுர் சர்க்கரைப் புலவருக்கு உளக்குடி, கோடாகுடி என்ற இரண்டு ஊர்களை வழங்கியது ஆகும்.
என்ன காரணத்தினால் இவரது ஆட்சி மேலும் தொடரவில்லை என்பதை அறிந்து கொள்வதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதுவரை வெளிவந்துள்ள சேதுபதி மன்னர்களது வரலாறுகளில் கிழவன் ரெகுநாத சேதுபதியை அடுத்து கி.பி. 1710-ல் முத்து விஜய ரகுநாத சேதுபதி சேதுநாட்டு மன்னரானார் என்ற செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. 

 

 


 

சேதுபதி மன்னர் வரலாறு

Anahita
Chapters
இயல் I தொன்மையும், தோற்றமும். i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் ii. கூத்தன் சேதுபதி iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி i. முத்து வயிரவநாத சேதுபதி ii. முத்து விஜயரகுநாத சேதுபதி iii. பவானி சங்கர சேதுபதி iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ii. இராமன் இல்லாத அயோத்தி iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு iv. சேது மன்னர்களது நிர்வாகம் i. சேதுபதி மன்னரது நடைமுறைகள் ii. அரண்மனையும் ஆவணங்களும் iii. அரண்மனை நடைமுறைகள் iv. இராமலிங்க விலாசம் அரண்மனை v. மூலக் கொத்தளம் இயல் IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் ii. அண்ணாசாமி சேதுபதி iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி iv. ராணி முத்து வீராயி நாச்சியார் vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி vii. பாஸ்கர சேதுபதி viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள் ii. சில முக்கிய நிகழ்வுகள் இயல் XI என்றும் நிலைத்து நிற்க... i. திருக்கோயில்கள் ii. திருமடங்கள் iii. அன்ன சத்திரங்கள் iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் v. தமிழ்ப் புலவர்கள் vi. தனியார்கள் இணைப்பு - அ இணைப்பு - ஆ இணைப்பு - இ i. போகலூர் சேதுபதிகள் ii. இராமநாதபுரம் சேதுபதிகள் iii. ஜமீன்தார் கொடி வழி i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு