சீடன் ஜெகநாத்
சீதாபூரில் விஸ்வநாத் என்பவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். மூத்தவன் விவசாயம் செய்தான், நடுப்பையன் வியாபாரம் செய்தான். ஆனால் மூன்றாவது மகன் ஜெகநாத்தைப் பற்றித்தான் அவருக்கு கவலை இருந்தது. ஏனென்றால் அவன் வீட்டில் நிலையாக இருக்க மாட்டான்.
ஜெகநாத் எந்த வேலையும் செய்யாமல் ஊரில் யாராவது சுபகாரியம் செய்தால் முன்னின்று எல்லாவற்றையும் செய்து முடிப்பான். பத்து பேரை வைத்து வேலை வாங்கி அவர்களை காயப்படுத்தாமல் அதிக வேலை வாங்கி அவர்களுக்கு கூலியும் கொடுப்பான். ஜெகநாத் ஒரு 'நடைமுறை இளைஞன்' என்று எல்லோரும் சொல்வார்கள்.
அதே ஊரில் இருந்த ஒரு உறவினர் விஸ்வநாத்திடம் ஜெகநாத் பற்றி கமலாநாயனாவுக்காக பேசினார். ஆனால் விஸ்வநாத், "என் மகன் சம்பாதிக்கத் தகுதியானவனாக ஆகும் வரை, எதை வைத்து அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பது? அதை செய்து அவனுடைய மனைவிக்கான பொறுப்பையும் நான் ஏன் சுமக்க வேண்டும்?" என்றார்.
"உங்கள் ஜெகநாத் மிகவும் நடைமுறை அறிவு உள்ளவன். அவனை வேதவனத்தில் இருக்கும் ஷ்ரத்தானந்திடம் அனுப்புங்கள். அங்கு அவனுக்கு சரியான கல்வி கிடைக்கும், நிச்சயமாக அரசவையில் வேலை கிடைக்கும்" என்று அந்த உறவினர் கூறினார்.
விஸ்வநாத் ஷ்ரத்தானந்தரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தார். ஷ்ரத்தானந்த் யாரையும் சீடனாக ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அவருக்கு தெரியும். கட்டணமாக நிறைய பணம் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட சீடர்களுக்கு மட்டுமே அரசவையில் வேலை கிடைக்கும். அவரிடம் பத்து வருடங்களாக படித்துக்கொண்டிருக்கும் சீடர்களும் உள்ளனர்.
உறவினரின் யோசனை விஸ்வநாத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர் தன் மகனை வேதவனத்திற்கு அனுப்ப முடிவு செய்தார். அவரே ஷ்ரத்தானந்தை சந்தித்து ஜெகநாத்தைப் பற்றி எல்லாவற்றையும் சொன்னார்.
"நீங்கள் சொன்னதை வைத்து பார்க்கையில் உங்கள் மகனுக்கு நடைமுறை அறிவு நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் தேர்ச்சி பெற்றால் சரி, இல்லையென்றால் ஒவ்வொரு வருடமும் எனக்கு இரண்டாயிரம் மொஹர் கொடுக்க வேண்டும். கல்வி எத்தனை வருடம் ஆகும் என்பது உங்கள் மகனின் புத்திசாலித்தனத்தைப் பொறுத்தது" என்றார் ஷ்ரத்தானந்த்.
உடனடியாக விஸ்வநாத் இரண்டாயிரம் மொஹர்களைக் கொடுத்து, "எந்த பரீட்சையும் இல்லாமல் என் மகனை சேர்த்துக் கொள்ளுங்கள். நான் வருடம் இரண்டாயிரம் மொஹர்களை கண்டிப்பாக கொடுக்கிறேன்." என்றார். சீதாபூருக்கு சென்றதும் ஜெகநாத்திடம் எல்லாவற்றையும் கூறினார்.
ஜெகநாத்திற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தந்தையின் விருப்பத்திற்காக வேதவனத்திற்கு சென்று ஷ்ரத்தானந்தை பார்த்தான். அவன் சொன்னான், "குருவே, என் அப்பாவின் பணத்தை வைத்து அல்ல, என் தகுதியை வைத்து சீடன் ஆக வேண்டும். நீங்கள் என்னை பரிசோதிக்கலாம்."
"உன்னை பரீட்சை செய்ய எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் உன் அப்பாவும் நானும் பேசி எல்லாம் முடித்துவிட்டோம். நீ தேர்ச்சி பெற்றாலும், நாங்கள் போட்ட ஒப்பந்தத்தை நீ பின்பற்ற வேண்டும்." என்றார் ஷ்ரத்தானந்த்.
ஜெகநாத் ஒப்புக்கொண்டான். ஷ்ரத்தானந்த் அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டார். அவன் அளித்த பதிலில் சந்தோஷமடைந்து, "நீ என் சீடனாக வந்து என் புகழை உயர்த்துவாய். பெரிய மனிதனாக நீ சீக்கிரம் மாறிவிடுவாய்" என்றார்.
குரு சொன்னதை கேட்டு ஜெகநாத்தும் சந்தோஷப்பட்டான். அவரிடம் சீடனாக சேர்ந்து அங்கேயே தங்கினான்.
ஆறு மாதங்கள் கடந்து போயின. வேதவனத்தில் ஷ்ரத்தானந்திற்கு இன்னும் நிறைய மாணவர்கள் சேர்ந்தனர். ஜெகநாத் சீக்கிரமே எல்லோருக்கும் பிடித்தமானவனாக மாறினான். அவர்களில் மதன் என்ற சீடனுடன் அவனுக்கு அதிக நட்பு ஏற்பட்டது.
மதன் ஜெகநாத்தின் புத்திசாலித்தனத்தை பார்த்து ஆச்சரியப்பட்டான். அவன் கேட்டான், "உனக்கு நிறைய விஷயங்களைப் பற்றி தெரியும். குரு உனக்கு எப்படி சொல்லித்தர முடியும்?"
"எனக்கு தெரிந்ததெல்லாம் உலக விஷயங்களைப் பற்றித்தான். நான் குருவிடமிருந்து ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை." என்று ஜெகநாத் சொன்னான் ஆனால் மதன் நம்பவில்லை.
மதனின் அப்பா மற்றும் ஷ்ரத்தானந்த் போட்ட ஒப்பந்தத்தின்படி அவர்கள் வருஷத்திற்கு ஐநூறு மொஹர்கள் கொடுத்தால் போதும். அதனால் குருஜிக்கு நாம் குறைவாக கட்டணம் செலுத்துவதால் தான் அவர் நம்மீது அக்கறை காட்டுவதில்லை என்று நினைத்தான்.
இங்கு இருக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு இப்படி நிறைய சந்தேகங்கள் இருப்பதை ஜெகநாத் தெரிந்து கொண்டான். யார் கட்டணம் செலுத்தவில்லையோ அல்லது யார் குறைவாக செலுத்தினார்களோ அவர்களுக்கு இன்னும் அதிகமாக சந்தேகம் இருந்தது. ஷ்ரத்தானந்த் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அதில் நடைமுறை அறிவு எதுவுமே இல்லை அதனால் அவர்கள் சந்தேகம் இன்னும் அதிகமானது.
குரு தன்னுடைய ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மலை ஏறுவது எப்படி, மல்யுத்தம் செய்வது எப்படி, தண்ணீரில் நீந்துவது எப்படி என்று விவரமாக சொல்வார். மலையின் அமைப்பு மற்றும் அதன் தன்மை என்ன, மனித உடலின் அமைப்பு எப்படி, நீர் ஓட்டத்தின் அறிகுறிகள் என்ன என்பது பற்றி அவருக்கு அத்துப்படியாக தெரியும். ஷ்ரத்தானந்த் ஆசிரமத்தை விட்டு எங்கும் போக மாட்டார். நிறைய நடந்தால் கால் வலிக்கும் என்று சொல்லுவார்.
உடல் உழைப்பு செய்தால் வலிக்கிறது அதனால் மல்யுத்தம் பற்றி நுணுக்கமாக சொல்வாரே தவிர மல்யுத்தம் செய்து காட்டியதே இல்லை. ஆற்றில் நீந்தவே போகமாட்டார் ஏனென்றால் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுவேன் என்று ஜோசியர் சொல்லி இருப்பதாக கூறினாராம். சீடர்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருவார்கள். அதில் தான் அவர் குளிப்பார்.
இப்படிப்பட்ட குருவிடம் என்ன கற்றுக்கொள்வது என்று ஜெகநாத் அடிக்கடி நினைத்துக்கொள்வான். குருஜி சமையல் பற்றி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். எந்தெந்த உணவுகளுக்கு என்ன சிறப்பம்சம் உள்ளது, எந்தெந்த பொருட்களை சேர்த்து செய்தால் உணவு இன்னும் சுவையாக இருக்கும் என்று சொல்லும்போது மாணவர்களின் வாயில் எச்சில் ஊறும். ஆனால் ஆசிரமத்தில் இனிப்பு வகைகள் சாப்பிடக்கூடாது. காய் கறிகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும். வருடம் முழுவதும் சொல்லிக் கொடுத்துவிட்டு மறுபடியும் அதே பாடத்தை சொல்லிக் கொடுப்பார்.
ஒரு நாள் பிரதீப் என்பவர் தலைநகரிலிருந்து ஷ்ரத்தானந்தை அழைக்க வந்தார்.
பிரதீப் ஒரு வருடம் ஷ்ரத்தானந்தின் சீடனாக ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒரு வருடம் கழித்து அவருக்கு அரசவையில் வேலை கிடைத்தது. அங்கு அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அவரது வேலையில் சந்தோஷமடைந்த ராஜா அவரை கௌரவப்படுத்த இருக்கிறார். இந்த விழாவில் குருஜிக்கு அழைப்பு கொடுக்க அவர் ஆசிரமத்திற்கு வந்தார். சீடனின் கட்டாயத்தின் பேரில் ஷ்ரத்தானந்த் மற்ற சீடர்களுடன் தலைநகருக்கு சென்றார். அங்கு பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் ராஜா பிரதீப்பிற்கு பத்தாயிரம் மொஹர்கள் கொடுத்தார். அவரின் நினைவாக கவிஞர்களை வைத்து பாடல்கள் எழுதினார்கள். ராஜாவின் நடனக்காரி நடனமாடி எல்லோரையும் சந்தோஷப்படுத்தினார்.
இந்த விழாவில் பிரதீப் குருஜி ஷ்ரத்தானந்தை மேடைக்கு அழைத்து பாத பூஜை செய்தார். அவர் சொன்னார் "நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குருஜி தான்."
தன் பேச்சில் ஷ்ரத்தானந்த் சொன்னார், "நான் என் சீடனுக்கு முதல் நாளே சொன்னேன் நீ பெரிய நிலைமைக்கு போவாய் என் பெயரை காப்பாற்றுவாய் என்று சொன்னேன். அது நடக்கும் என்று எனக்கு அப்பவே தெரியும். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்."
குருவின் பேச்சு ஜெகநாத்திற்கு சந்தோஷம் அளித்தது. பக்கத்தில் இருந்த மதனிடம் அவன் சொன்னான், நான் எப்போது சீடன் ஆனனோ அப்போதே குருஜி இப்படித்தான் என்னிடம் சொன்னார். நான் சீடன் ஆகி ஆறு வருடங்கள் ஆகிறது இன்னும் எத்தனை நாள் இந்த படிப்பு நடக்குமோ யாருக்கு தெரியும். இந்த பிரதீப் ரொம்ப புத்திசாலி. ஒரு வருஷத்திலேயே தெரிந்து கொண்டான் இந்த குருஜிடம் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று. அவன் ஆசிரமத்தை விட்டு சென்றுவிட்டான் இப்போது பார் பெரிய இடத்தில் உட்கார்ந்து இருக்கிறான். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை." இப்படியெல்லாம் மனதில் நினைத்ததால் அன்றிரவு ஜெகநாத்திற்கு தூக்கம் வரவில்லை.
மறுநாள் ராஜா ஷ்ரத்தானந்தை சந்தித்து சொன்னார், "என் அரசவையில் பொருளாளர் பதவி காலியாக உள்ளது. உங்கள் சீடர்களில் யாராவது தகுதியானவர் இருந்தால் சொல்லுங்கள்."
ஷ்ரத்தானந்த் தன்னுடைய சீடர்களை பார்த்தார். சட்டென்று ஜெகநாத் எழுந்து நின்று சொன்னான், "என் படிப்பு இப்போது முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். குரு அனுமதி கொடுத்தால் நான் இந்த வேலையை செய்ய தயார்."
அனுமதி கொடுத்து குரு சொன்னார், "சீக்கிரம் நீயும் கௌரவிக்கப்படுவாய் அப்போது இந்த குருவை மறந்து விடாதே." ஜெகநாத் குருவின் காலில் விழுந்து வணங்கினான்.
இப்போது மதனை தனியாக அழைத்து ஜெகநாத் சொன்னான், "பார்த்தாயா நம் குருஜிக்கு பாரபட்சம் பார்க்கும் பழக்கம் உள்ளது. உன் அப்பா இரண்டாயிரம் மொஹர் கொடுத்ததனால் தான் உனக்கு வேலை கிடைத்துள்ளது. உனக்கு வேலை வாங்கிக் கொடுத்ததற்க்கு குருஜி தான் காரணம் என்று அவரை புகழ்வாய். இப்படித்தான் அவர் பெரிய குருவாக மாறுகிறார். நாங்கள்லாம் பாவப்பட்ட சீடர்கள் எப்பவும் இவர்கிட்ட வேலை செஞ்சுகிட்டே இருக்கணும்."
மதனின் முதுகில் தட்டி ஜெகநாத் சொன்னான், "நீ தப்பா நெனச்சுக்கிட்டு இருக்க. அவர் எல்லா சீடர்களுக்கும் ஒன்னுதான் சொல்லிக்கொடுக்குறாரு. ஆனா அவர் என்ன சொல்லி கொடுத்தாரோ அதுல ஒரு ரகசியம் இருக்கு. புக்ல இருந்து என்ன படிச்சு தெரிஞ்சுக்கிறோமோ அது வேஸ்ட். அனுபவம் இல்லாம நாம மலைய ஏறவும் முடியாது. யுத்தம் பண்ணவும் முடியாது. தண்ணீரில் நீந்தவும் முடியாது. சமையல் பண்ணவும் முடியாது. வாழ்க்கையில அனுபவம் தான் முக்கியம். அந்த ரகசியத்தை நீ எப்போ தெரிஞ்சுகுறியோ அப்போ உன்னுடைய கல்வி முழுசும் இல்லாம இருக்கும். பிரதீப் சீக்கிரம் அந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கிட்டான் அதனால ஒரு வருஷத்துல தன்னுடைய படிப்ப முடிச்சுட்டு போய்ட்டான். குருஜி சொல்லிக்கொடுத்ததை கவனத்துல வச்சுக்கிட்டு அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டான். ஒரு வருஷம் முடிஞ்சு மறுபடியும் அதே பாடம் சொல்லிக்கொடுக்கும்போது நாமதான் அத தெரிஞ்சுக்கணும். குரு மறைமுகமா நமக்கு அத சொல்றாரு. சொல்லாமலே அவர் நம்மள போக சொல்றாரு. வாழ்க்கையில திறமை இருக்கிறவங்க சொல்லிட்டு இருக்கமாட்டாங்க அவங்க மறைமுகமா தான் சொல்லுவாங்க."
ஜெகநாத்தின் அறிவை பாராட்டி மதன் சொன்னான், "இப்போ புரிஞ்சுக்கிட்டேன் தப்பு குருஜி மேல இல்ல. இத தெரிஞ்சுக்கிட்டு இன்னும் கொஞ்ச நாள் குருஜிக்கு சேவை செய்வேன் அதுக்கப்புறம் நானும் வெளிய வந்துருவேன்."
ஜெகநாத் அரசவையில் வேலை செய்ய ஆரம்பிச்சான். அதுக்கப்புறம் கமலாநாயனாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு தன்னுடைய தகுதி மற்றும் அனுபவத்தின் மூலம் பெரிய பதவிக்கு வந்துட்டான். அதனால குருவுக்கும் புகழ் அதிகமாயிடுச்சு.